வெற்றியின் விளிம்பில் இந்தியா - குறுக்கிட்ட மழை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின், 4-ம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, புஜாரா, ரிஷப் பண்ட் ஆகியோரின் அபார சதத்தால் முதல் இன்னிங்சில் 622 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது. அப்போது, ஹேண்ட்ஸ்காம்ப் 28 ரன்களுடனும், கம்மின்ஸ் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியாவை விட இன்னும் 386 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ஆட்டத்தின் 4-வது நாளான இன்று, ஆஸ்திரேலியாவின் எஞ்சிய விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய வீரர்கள் தயாராகினர். ஆனால், மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஒரு பந்துகூடு வீச முடியாமல் ஆட்டத்தின் முதல் செஷன் பாதிக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget