திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்திவைப்பு வழக்கு தள்ளுபடி

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பாணையை வெளியிட தடைகோரி காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசராணைக்கு வந்தது. அப்போது, இடைத்தேர்தலால் கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்று மனுதாரர் கூறினார். அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம், தலைமை செயலாளரை கலந்தாலோசித்து தான் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், தமிழக அரசு அனுமதி கேட்டால், நிவாரணப் பணிகள் வழங்க அனுமதி வழங்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், இடைத்தேர்தல் அறிவிப்பாணைக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், தேர்தல் ஆணையம், தலைமை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget