சபரிமலை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயனின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. கம்யூனிஸ்டு, பா.ஜ.க கட்சி தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்படுவதும், வெடிகுண்டுகள் வீச்சு சம்பவமும் நடந்து வருகின்றன. இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதேபோல் தலச்சேரி பகுதியில் இருக்கும் கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
Post a Comment