மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம்!

காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2017-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட செல்லத்துரை கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான குழுவை இறுதி செய்வதில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்த நிலையில், துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 14 பெயர்கள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதிலிருந்து மூன்றாம் கட்டமாக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் பல்கலைக்கழக புதிய துணை வேந்தராக கிருஷ்ணன் என்பவரை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழக துறை தலைவராகவும், ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழக பேராசிரியராகவும் பணியாற்றிய கிருஷ்ணன் கல்வித்துறை 28 வருட அனுபவம் பெற்றவர் என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

அண்மை காலங்களில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலும் இந்துத்துவ, வலதுசாரி சிந்தனை உடையவர்களாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கிருஷ்ணனின் பின்னணி என்ன? என்பது குறித்து விரைவில் பல்கலைக்கழக செயல்பாடுகளின் மூலம் தெரியவரும்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget