அதிக பொய்களை சொல்லி நூதன சாதனை படைத்த ட்ரம்ப்

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 158 பொய்யான தகவல்களை வெளியிட்டு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.


அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதியேற்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது செயல்பாடுகள் குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அவர் 8 ஆயிரத்து 158 பொய்யான தகவல்களை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவரது முதலாவது ஆண்டில் நாள் ஒன்றுக்கு 6 தவறான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், 2வது ஆண்டில் 16 தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது. அதிகபட்சமாக வெளியுறவு கொள்கை, வர்த்தகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget