நெருங்கும் தேர்தல்... அன்னா ஹசாரேவின் போராட்டம் ஏன்?

மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஊழலுக்கு எதிரான லோக் பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி பிரபலமானவர் அண்ணா ஹசாரே. அதை தொடர்ந்து 2013ல் காங்கிரஸ் ஆட்சிகாலத்திலேயே லோக்பால் மற்றும் லோக்காயுக்தா மசோதா உருவாக்கப்பட்டது. பின்னர் ஊழலை ஒழிக்கப்போவதாக உறுதியளித்து 2014ல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது அந்த லோக் பால் சட்ட மசோதா பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

5 ஆண்டுகளாக இது குறித்து பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்த அண்ணா ஹசாரே போராட்டத்தை அறுவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பாஜக ஆட்சியில் ஏதேனும் நடக்கும் என்று நம்பினோம். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. ஆகையால் நான் எனது ரிலிகன் சித்தி கிராமத்தில் வருகின்ற ஜனவரி 30ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.


அறிவிப்பின் பின்னணி:

அன்னா ஹசாரே முன்பு நடத்திய போராட்டம் டெல்லி ஜந்தர் மந்தரில். ஆனால், இப்போது யாரும் அறிந்திடாத ஒரு இடத்தில் போராட்டம் நடத்துகிறார். இனி இவர் பின்னால் யாரும் வரப்போவதில்லை என்ற உண்மையும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அவர் இது போன்ற போராட்டங்களை அறிவிப்பதும், நடத்துவதும், நிறுத்துவதும் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாகவும், 
அவர் ஒரு பாஜக ஆதரவாளர் என்ற நிலைபாடும் மக்கள் மனதில் குடிகொண்டுள்ளதும் இந்த போராட்டத்தின் வீரியத்தை குறைக்கும்.  அன்னா ஹசாரேவின் அன்றைய ஊழல் ஒழிப்பு கூட்டாளிகள் என அறியப்பட்ட சாமியார் பாபா ராம்தேவ், கிரண் பேடி உள்ளிட்டோர் தற்போது வெளிப்படையான பாஜக ஆதரவு நிலைபாட்டில் உள்ளனர். டெல்லி மாநில தேர்தலில் அன்னாவின் சீடராக அறியப்பட்ட அர்விந்தகெ ஜ்ரிவாலை எதிர்த்தும், பாஜகவை ஆதரித்தும் இவர்கள் தேர்தலில் நின்றபோது அவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொண்டார்கள்.

இப்போதைய போராட்டம் ஏன்?

இப்போது நம் ஊடகங்களில் எப்படி மக்களுக்கு செய்திகள் காட்டப்படும் என்றால், மன்மோகன் சிங்கை எதிர்த்து அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தபோது கூடிய மாபெரும் கூட்டம். மோடியை எதிர்த்து உண்ணாவிரதம் நடத்தும்போது இல்லை என்ற ஒப்பீட்டை காட்டும். ஆகவே, மோடி ஊழலற்றவர்" என மனோநிலை கட்டமைக்கப்படும்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget