9 பணக்காரர்கள் = 68 கோடி ஏழைகள் - இந்தியாவின் இன்றைய பொருளாதார பார்முலா


இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர மாநாட்டில், சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம், ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சில செல்வந்தர்கள் இந்தியாவின் செல்வத்தின்பெரும் பங்கைக் குவித்து வருவதாகவும், ஏழைகள் அடுத்தவேளை உணவு சாப்பிட முடியாமலும், குழந்தையின் மருத்துவத்திற்கு செலவு செய்ய முடியாமலும் திண்டாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கோடீஸ்வரர்கள், கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 2,200 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர், மொத்த தேசிய செல்வத்தில் 77.4 சதவீதத்தை வைத்துள்ளதாகவும், இந்திய பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேர் மொத்த செலவத்த்தில், 51.53 சதவீதத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் 9 கோடீஸ்வரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget