Highlights

Highlights

HOT POSTS

latest

தமிழகம்

Tamilnadu

தேசியம்

India

ஆசியா

asia

சர்வதேசம்

world

செய்தியின் பின்னணி

மறைக்கப்பட்டவை

விழித்திரு

article

காசு... பணம்... துட்டு

நம்பலாமா? வேண்டாமா?

அதிக பொய்களை சொல்லி நூதன சாதனை படைத்த ட்ரம்ப்

No comments
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற 2 ஆண்டுகளில் 8 ஆயிரத்து 158 பொய்யான தகவல்களை வெளியிட்டு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளார்.


அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதியேற்று 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அவரது செயல்பாடுகள் குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அவர் 8 ஆயிரத்து 158 பொய்யான தகவல்களை ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அவரது முதலாவது ஆண்டில் நாள் ஒன்றுக்கு 6 தவறான தகவல்களை வெளியிட்டு வந்ததாகவும், 2வது ஆண்டில் 16 தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் கூறியுள்ளது. அதிகபட்சமாக வெளியுறவு கொள்கை, வர்த்தகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பாக டொனால்டு ட்ரம்ப் பொய்யான தகவல்களை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு தடை!

No comments
வரவேற்பு என்பதைக்உலகம் முழு

கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகமான பப்ஜி விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாளடைவில் பலரும் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக தொடங்கினர்.

இதனையடுத்து, பல்வேறு உலக நாடுகள் பப்ஜி விளையாட்டுக்கு கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநில அரசு பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதித்துள்ளது. இதனை அனைத்து மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தவேண்டும் என்று குஜராத் மாநில அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது.
குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையத்தின், பரிந்துரையின் பேரில் பப்ஜி விளையாட்டைத் தடைசெய்யவேண்டும் என்று மாநில தொடக்கக் கல்வித்துறை என்று அறிக்கை வெளியிட்டது.

அதிமுக பாஜக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் பேச்சு

No comments
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும்,  அதிமுகவும் கூட்டணி அமைத்து உறுதியாக போட்டியிடும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

புதுசேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பா.ஜ.க-வும், அதிமுக-வும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கூறினார். மேலும், தினகரன் அதிமுகவோடு இணைய வேண்டும் என்று கூறிய அவர், இது தொடர்பாக தினகரனை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்றார்.

நியூசு பார்வை:
ராம்தாஸ் அத்வாலே பாஜக கட்சியை சேர்ந்தவர் கிடையாது. இந்திய குடியரசு கட்சியை நடத்தி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அமைச்சரானவர். இவரது கருத்து எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்பது கேள்விக்குறி. அது மட்டுமின்றி தம்பிதுரை பாஜகவை கடுமையாக சாடி வரும் நிலையில், அதிமுக பாஜகவை கழற்றிவிட்டு தேர்தலை சந்தித்தால் ஓரளவு தமிழகத்தில் ஆதரவு கிடைக்கும் என கருதுகிறது. ஒருவேளை தேர்தல் முடிவில் இழுபறி ஏற்பட்டால் அதிமுக தேர்தலுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பிடிக்க திட்டம் வகுத்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கக் தெரிவிக்கின்றன.

ஆண் வேடமணிந்து முடிதிருத்தம் செய்யும் சகோதரிகள்

No comments
தந்தைக்கு உடல் நிலை குன்றியதால் அவர் நடத்திய முடி திருத்தும் கடையை அவரது மகள்கள் ஆண்கள் போல் வேடமணிந்து நடத்தி வருகின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஜோதி குமாரி, நேஹா ஆகிய 2 சகோதரிகளின் தந்தை சொந்தமாக முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டு குடும்பம் கடுமையான வறுமையில் தவித்தது. இந்த நிலையில், 2 சகோதரிகளும் தன் தந்தையின் முடிதிருத்தும் கடையை நடத்த தொடங்கினர். பெண்கள் என்பதால் அவர்களிடம் முடிதிருத்தம் செய்ய கிராம மக்கள் தயங்கினர். இதன் காரணமாக இருவரும் ஆண்களைப் போல் தங்கள் உடை, பாவனையும், பெயரையும் தீபக், ராஜு என்று மாற்றிக் கொண்டனர். இதனை தொடர்ந்து அந்த முடிதிருத்தம் செய்யும் கடைக்கு ஏராளமான மக்கள் ஆர்வமுடன் வருகை தர தொடங்கியுள்ளனர். இதன் மூலம் நாள் தோறும் 400 ரூபாய் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளிக்கிறது - அமைச்சர் குற்றச்சாட்டு

No comments
அண்மையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் கோவிந்த் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ், பாஜக கூட்டாக சேர்ந்து ஆயுத பயிற்சியளித்து வருவதாக குற்றம்சாட்டினார். வன்முறையை ஏற்படுத்தும் வகையில் தங்கள் தொண்டர்களுக்கு ஆயுதங்களை, வெடிகுண்டுகளை, அணு குண்டுகளாய் தயார் செய்யவும், அவற்றை வெடிக்க வைக்கவும் பாஜக பயிற்சியளிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.


நியூசு பார்வை:

ஆர்.எஸ்.எஸ், பாஜக தலைவர்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் எனவும், அவர்களை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளை, நக்சல்கள், மாவோயிஸ்டுகள் எனவும் சித்தரித்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் பிரபல்யம் அடைவதற்காகவும், தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கிடைப்பதற்காகவும், தங்கள் வீடுகள் மீதே பெட்ரோல் குண்டு வீசி சிக்கிக்கொண்டதையும் அண்மையில் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், முசாபர் நகர் கலவரம், கோவை கலவரம், மாலேகான் குண்டு வெடிப்பு, ஐதராபாத் மசூதி குண்டு வெடிப்பு, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே உள்ளிட்டோர் படுகொலை, தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்து ஊர்வலத்தின் போது கட்டவிழ்த்து விடப்படும் கலவரங்கள், அடிக்கடி அரங்கேறும் பசுப்படுகொலைகள் என அனைத்தும் ஆர்.எஸ்.எஸ், விஎச்பி, சிவசேனா, பஜ்ரங்தள், இந்து முன்னணி, ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளால் நிகழ்த்தப்படுகின்றன.

நிலை இவ்வாறு இருக்க, மத்திய பிரதேச அமைச்சர் கோவிந்தின் இந்த கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. தேசிய பாதுகாப்பு தொடர்புடையது. ஒருமுறை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு வெடிகுண்டு தயாரிக்க பயிற்சியளிக்கிறது என ஒரு மாநில கேபினட் அமைச்சரே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது குறித்து இந்திய உள்துறை கவனத்தில் கொள்ளவேண்டும். நாடு முழுவதும் ஸ்லீப்பர் செல்கள் போல் பரவிக்கிடக்கும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு வெடிகுண்டு பயிற்சி அளிக்கப்படுவது என்பது தேசத்தையே அச்சுறுத்தும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தீபாவளி பட்டாசு வைத்திருந்தவர்களை எல்லாம், தீவிரவாதி என சொல்லி கைது செய்யும் தேசிய புலனாய்வு முகமை மத்திய பிரதேச அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு செவி சாய்த்து அதன் படி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஆதாரம்:https://zeenews.india.com/video/india/rss-training-people-to-make-atom-bomb-weapons-congress-minister-govind-singh-2172694.html

தன் வீட்டில் தானே குண்டு வீசிய பாஜக பிரமுகர் கைது: http://www.dinakaran.com/News_detail.asp?Nid=337707

9 பணக்காரர்கள் = 68 கோடி ஏழைகள் - இந்தியாவின் இன்றைய பொருளாதார பார்முலா

No comments

இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 
உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்தர மாநாட்டில், சர்வதேச உரிமை குழு ஆக்ஸ்பாம், ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சில செல்வந்தர்கள் இந்தியாவின் செல்வத்தின்பெரும் பங்கைக் குவித்து வருவதாகவும், ஏழைகள் அடுத்தவேளை உணவு சாப்பிட முடியாமலும், குழந்தையின் மருத்துவத்திற்கு செலவு செய்ய முடியாமலும் திண்டாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கோடீஸ்வரர்கள், கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு 2,200 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர், மொத்த தேசிய செல்வத்தில் 77.4 சதவீதத்தை வைத்துள்ளதாகவும், இந்திய பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேர் மொத்த செலவத்த்தில், 51.53 சதவீதத்தை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் 9 கோடீஸ்வரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட மத்திய அமைச்சர்

No comments
குஜராத்தில் நடந்த உலக அளவிலான 9-வது நூற்பாலை மாநாட்டில் கலந்து கொண்டு மத்திய நூற்பாலைத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, மோடி பிரதமரான பிறகு குஜராத்தில் நூற்பாலை மற்றும் ஆடையக தயாரிப்பு வளர்ந்துள்ளதாகவும் இதனால் 30 ஆயிரம் கோடி அளவில் முதலீடு கிடைத்துள்ளதாகவும் பேசினார்.

அதே நிகழ்வில் அவர், நூற்பாலைத் துறை முதலீடுகள் தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் நூற்பாலைத் துறை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஸ்மிருதி இராணியின் பேச்சுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் வேறுபட்டிருந்ததால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொழிலதிபர்கள் குழப்பமடைந்தனர்.
© all rights reserved
Designed by Dot colors